கேப்ச்சா டெஸ்ட் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, April 27, 2010

கேப்ச்சா டெஸ்ட்

ஏதேனும் ஒரு வெப்சைட்டில் நீங்கள் தேடும் தகவல்கள் அந்த தளத்தில் தொடர்ந்து கிடைக்கும் போல் தெரிகிறது. உடனே அந்த இணைய தளத்தில் சேர்ந்து அவர்களின் இமெயில்களைப் பெற்று தகவல்களைப் பெற அதற்கான இடத்தில் கிளிக் செய்கிறீர்கள். உடனே ஒரு கேள்வித்தாள் போல ஒரு படிவம் தரப்பட்டு அதில் உங்கள் பெயர், உங்கள் இமெயில் முகவரி, யூசர் நேம், பாஸ்வேர்ட் மற்றும் உங்களைப் பற்றிய தகவல்கள் கேட்கப்படுகின்றன. இவற்றை அடுத்து முடிக்கப் போகும் முன் ஒரு கட்டத்தில் விநோதமான முறையில் சிறிய பெரிய எழுத்துக்களும், எண்களும் சில சிறப்பு கேரக்டர்களும் அடங்கிய ஒரு சொல் தரப்பட்டு அதே போல பக்கத்தில் உள்ள கட்டத்தில் டைப் செய்திடுமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

ஆனால் அதனைப் புரிந்து கொண்டு டைப் செய்வது சற்று சிரமமாக இருந்தாலும் 98% பேர் இதனைச் சரியாகவே டைப் செய்கின்றனர். இதுவரை தகவல்களைத் தந்துவிட்டு இந்த சொல்லை டைப் செய்திட முடியவில்லை என்றால் தங்கள் முயற்சிகளையே கைவிட்டு விட்டு நான் இந்த விளையாட்டுக்கு வரலப்பா என்று கூறிவிட்டு தளத்தின் பக்கத்தை மூடுகிறார்கள். ஏன்? இது என்ன மாதிரியான தேர்வு? இது உங்கள் பாதுகாப் பிற்காகத்தான் தரப்படுகிறது. இதைத்தான் கேப்ச்சா டெஸ்ட் என அழைக்கின்றனர்.

பொதுவாக இதில் தரப்படும் சொல் நேராக அதன் பாக்ஸில் தெரியாது. சிறிது வளைந்தும் நெளிந்தும் இருக்கும். சிறிய மற்றும் பெரிய எழுத்துக்களுடன் எண்களும் சிறப்புக் குறியீடுகளும் இருக்கும். எனவே தான் இதனை டைப் செய்வது கடினமாகிறது. இந்த கேப்சா டெஸ்ட் பெரும்பாலும் ஆன்லைன் ஷாப்பிங் தரும் தளங்களில் இருக்கும். மைஸ்பேஸ், டிக்கட்மாஸ்டர் போன்ற வகை தளங்களில் நிச்சயம் இவை காணப்படும்.


இந்த டெஸ்ட்கள் நம்மைச் சோதனை செய்து நம்மை எரிச்சல் படுத்துவதாக எண்ண கூடாது. ஏனென்றால் இவை நம்முடைய நன்மைக்கே. இது ஒரு வகை பாதுகாப்பினை நமக்கு அளிக்கிறது. நம்முடைய பெர்சனல் தகவல்களை கேட்கும் தளங்களில் இந்த வகை டெஸ்ட்கள் கையாளப்படுகின்றன. இந்த டெஸ்ட்களைக் கம்ப்யூட்டர்களே அவ்வப்போது வடிவமைத்து தந்தாலும் அவை கூடத் தீர்த்து வைக்க முடியாது. மனிதர்கள் மட்டுமே சரியான கோட் குறியீட்டினை டைப் செய்து தர முடியும். இதனால் உங்களின் பாதுகாப்பு பலப்படுகிறது. எனவே இது போன்ற டெஸ்ட்கள் இருக்கின்றன என்பதற்காக எந்த இணைய தளத்தையும் தள்ளிவிடாமல் உங்கள் தேடலைத் தொடருங்கள்.


------------------- நன்றி -------------------

No comments:

Post a Comment